மத்திய மாகாணசபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

மத்திய மாகாணசபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதன்படி, சபையின் நிர்வாகத்தை ஆளுநரிடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதனைத்தவிர, எதிர்வரும் 10ஆம் திகதி வட மேல் மாகாணத்தினதும் எதிர்வரும் 25ஆம் திகதி வட மாகாணத்தின் பதவிக்காலமும் நிறைவடையவுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம்10 திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் தென் மாகாணசபை மற்றும் மேல் மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைடையவுள்ளதுடன், எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி ஊவா மாகாணசபையின் பதவிக்காலமும் நிறைவடையவுள்ளது.

இதேவேளை,மாகாணசபை எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கையை வௌியிடும் தினம் குறித்து தெரிவிக்க முடியாது என குறித்த குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், அறிக்கையை மீளாய்வு செய்யும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எல்லைநிர்ணய மீளாய்வுக் குழு, இதுகுறித்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் கேட்டறிவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Sharing is caring!