மத நிந்தனை செய்ய இடமளிக்க முடியாது

நாடகத்தின் மூலம் மத நிந்தனை செய்வதாக இருந்தாலும் அதற்கும் பௌத்த மதத்தையே எடுத்துக் கொள்வதாகவும், இதற்குக் காரணம் ஏனைய மதங்களை நிந்தனைக்கு எடுத்துக் கொண்டால் வாங்கிக் கொட்டிக் கொள்ள வேண்டி வரும் என்பதனால் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடகம் உருவாக்குவது தவறல்ல. அதற்காக எந்தவொரு இனத்தையும், மதத்தையும் நிந்தனை செய்ய இடமளிக்க முடியாது.

இந்த நாட்டில் நடக்கும் பௌத்த மத நிந்தனை நடவடிக்கைகள் குறித்து நாம் சிரிப்பதற்கு முடியாது. அழவேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு மதத்தையும் நிந்திக்க நாம் இடமளிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

மொனராகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்

Sharing is caring!