மனித எச்சங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன

பன்னல – கங்கானியமுல்ல பகுதியில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரின் மனித எச்சங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் கடந்த மாதம் 03 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்த நிலையில், அவருடைய உறவினர்கள் பன்னல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இளைஞரின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எச்சங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

Sharing is caring!