மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளும் அதிர்ச்சி தகவல்களும்

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது நிலையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.

மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இன்று 62 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இதுவரை குறித்த வளாகத்தில் 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது. அத்துடன் 97 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன..

மேலதிகமாக காணப்படும் 14 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இடம்பெறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.

ஆனாலும் இதுவரை 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டாலும் 97 மனித எச்சங்கள் மீட்கப்பட்டாலும் குறித்த வளாகத்தில் இருந்து மீட்க்கப்பட்ட தடைய பொருட்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

இது வரை வட்ட வடிவிலான உலோகப்பொருட்கள் மாலை போன்ற ஒரு சில தடைய பொருட்களே மீட்கப்பட்டுள்ளன.

இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும் இது வரை துணிகளோ அல்லது ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த விதமான தடைய பொருட்களும் கிடைக்கவில்லை என்பது சந்தோகத்திற்குறியதாக காணப்படுகின்றது.

சடலங்களாக புதைக்கப்பட்ட போது ஆடையில் காணப்படும் தடையப்பொருட்கள் எவையும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் புதைக்கப்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்களாம்? என மக்கள் மத்தியில் சந்தோகம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!