மன்னாரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் – சந்தேகம்

மன்னாரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

72 ஆவது நாளாக நேற்று மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளில் போதே எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கொடூரமாக காணப்படுவதாகவும், அவை மிகவும் கெடூரமாகக் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்தவாரம் மீட்கப்பட்ட எலும்புக்கூடொன்று கைகள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, அகழ்வுப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் நேற்றைய அகழ்வு பணியின் போது மேலதிகமாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Sharing is caring!