மன்னார் சதொச வளாக புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

விரிவுரைகள் உள்ளிட்ட ஏனைய சில விடயங்கள் காரணமாக அகழ்வு நடவடிக்கைள் ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், இது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் ஆரம்பமாகிய இந்தப் புதைகுழி அகழ்வில், இதுவரை 143 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டதைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அகழ்வுப் பணிகள், மன்னார் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் தலைமையில் நடைபெறுகின்றன.

Sharing is caring!