மன்னார் புதைகுழி அகழ்வை ஒழிப்பதிவு செய்யத்தடை

மன்னார் சதொத கட்டட வளாகத்தில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிக்குள் உட்பிரவேசித்தல், நிழற்படம் எடுத்தல் மற்றும் ஔிப்பதிவு செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு மன்னார் மாவட்ட நீதவானால் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணி தொடர்பான புலனாய்வு விசாரணைகளுக்காக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார்.

அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரிகளின் அனுமதியின்றி, நிழற்படம் எடுத்தல் மற்றும் ஔிப்பதிவு செய்தல் மற்றும் அந்த பகுதிக்குள் நின்று கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் ஆகியன தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகவலைத்தள பொறுப்பாளர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!