மருத்துவ பீடத்தின் ஒழுங்கமைப்பில் மருத்துவ கண்காட்சி

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மருத்­துவ பீடத்­தின் ஏற்­பாட்­டில் மருத்­து­வக் கண்­ காட்சி பல்­க­லைக் கழக கிளி­நொச்சி வளா­கத்­தில் ஏப்­ரல் மாதம் 2ஆம் மற்­றும் 3ஆம் திக­தி­க­ளில் இடம்­பெ­றும் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மருத்­துவ பீடத்­தின் 40ஆவது ஆண்டு நிறை­வை­ யொட்டி ‘புத்­து­யிர்ப்பை நோக்கிய ஆரோக்­கி­யம்’ என்ற தொனிப் பொரு­ளில் இந்­தக் கண்­காட்சி இடம்­பெ­ற­வுள்­ளது.

மருத்­து­வத் துறை­யின் நவீன வளர்ச்­சி­கள், முறை­யான உண­வுப் பழக்க வழக்­கங்­கள், தொற்றா நோய்­க­ளும் விழிப்­புர்­ண­வும், முக்­கிய நோய்­கள் பற்­றிய விளக்­கம், வடக்கு மாகாண மக்­க­ளுக்கு இலங்­கை­யில் கிடைக்­கக் கூடிய இல­வச சுகா­தார சேவை­கள், பாட­சாலை மாண­வர்­க­ளின் சுகா­தார விஞ்­ஞா­னம் சார்ந்த அறி­வு­கள், இளை­யோர்­க­ளுக்கு சுகா­தா­ரத் துறை சார்ந்த தொழில் வாய்ப்­பு­க­ளுக்­கான வழி­காட்­டல்­கள், இல­வச மருத்­துவ பரி­சோ­த­னை­கள் போன்ற பல்­வேறு விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த கண்­காட்சி அமை­ய­வுள்­ளது.

Sharing is caring!