மலையகத்தில் ஐஸ் மழை

மலையத்தின் பல பகுதிகளுக்கு நேற்று மாலை அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவை, நோர்வுட் மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு அடைமழை பெய்துள்ளது.

இதன்போது பல இடங்களில் அடைமழையின் போதும், ஆழங்கட்டி விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாரிய நீர் தட்டுப்பாட்டு ஏற்பட்ட நிலையில் அந்தப்பகுதிகளில் 15 நிமிடங்கள் வரை ஆழங்கட்டி மழை பெய்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

Sharing is caring!