மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை, எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று காலை முதல் நாட்டின் மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Sharing is caring!