மஹிந்தவுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்த கடற்படை அதிகாரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரி தொடர்பான அறிக்கை, இலங்கை கடற்படை நிறுவனத்திடன் இல்லையென, கடற்படை தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் அறிவித்துள்ளதாக, சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். மொஹமட் வசிம் தாஜுதீன் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கின் போது, சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில், சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இந்த காரணங்களை நீதிமன்றில் முன்வைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில், கடற்படை தளபதியின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாமையின் காரணமாக, வழக்கு விசாரணைகள் தாமதமாக காரணமாக அமைந்திருப்பதையிட்டும், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!