மஹிந்த அமரவீரவிடமிருந்து வாகனங்களின் சாவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன

விவசாய அமைச்சராக அமைச்சுப் பதவியில் கடமையாற்றி வந்த மஹிந்த அமரவீர புதிய அமைச்சரவையினை நியமிக்கும் முன்பு நேற்றைய தினம் தன் வசமிருந்த அரச வாகனங்களை மீள அமைச்சிடம் ஒப்படைத்துள்ளார்.

விவசாய அமைச்சின் செயலாளர் பாலித வீரகோனினால் மஹிந்த அமரவீரவிடமிருந்து வாகனங்களின் சாவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர அமைச்சரின் பணியாளர்கள் அலுவலக தேவைகளுக்காக பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும் மீள அமைச்சிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை நியமிக்கும் சந்தர்ப்பத்தில் அவரது ஊழியர்கள் எந்தவொரு தடையும் இன்றி செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ள தாம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக மஹிந்த அமரவீர இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!