மஹிந்த தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா?

சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடம் நாட்டின் அரசியல் இறைமையையும், பொருளாதார இறைமையையும் காட்டிக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடமிருந்து கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பெற்றுக் கொண்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். இந்த உரையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பிரஜை என்ற ரீதியில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பதிலளிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. இதனைவிடுத்து அவர் தொடர்ந்தும் தேசப்பற்றாளர் எனக் காண்பிக்க முடியாது. இதுபோன்ற தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!