மஹிந்த நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சருக்கான கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சருக்கான கடமைகளை இன்று (31) பொறுப்பேற்றுள்ளார்.

கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் பிரதமர் ஆற்றிய உரையில்,

நாட்டின் வளங்கள் வௌிநாடுகளுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுப்பதற்கான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட ​வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எதிர்கால சந்ததியினருக்காக நாட்டின் வளங்களைப் பாதுகாக்குமாறு அனைவருக்கும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் எரிபொருள் கட்டணத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் சூத்திரத்தை மாற்றவேண்டிய தேவை இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்திற்கு வரி வருமானம் தேவையென்றபோதிலும், மக்கள் மீது சுமைகளை சுமத்தக் கூடாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

25 வருடங்களுக்கு பின்னர் வட மாகாணத் ​தேர்தலை நடத்தி, தமது ஆட்சியில் மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ, தற்போது தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

Sharing is caring!