மஹிந்த ராஜபக்ச குடும்ப சகிதம் கருணா

விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்து பின்னர் அந்த அமைப்பை பிளவுபடுத்தியவரும், முன்னாள் அமைச்சருமானவிநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை குடும்ப சகிதம் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.

இதில் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் அவரது மனைவியும், மகனும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து இன்று அதிகாலை விரைந்த விநாயகமூர்த்தி முரளிதரன், விசேட அழைப்பின் பேரில் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சில முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனே முதலில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Sharing is caring!