மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியாவின் டில்லியில்

மூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) இந்தியாவின் டில்லி நோக்கி செல்லவுள்ளார்.

இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியம் சுவாமியின் விசேட அழைப்பை ஏற்று அக்கட்சியின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டே அவர் இந்தியா செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!