மஹிந்த ராஜபக்ஷ மான நஷ்டஈடு கோரட்டும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு சீனா துறைமுக அபிவிருத்தியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றிடமிருந்து 7.9 மில்லியன் டொலர் பணத்தைப் பெற்றுள்ளதாக கூறப்படுவது பொய்யாயின் அந்த தகவலை வழங்கிய அமெரிக்காவின் பிரபல பத்திரிகைக்கு எதிராக, மான நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யட்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன துறைமுக அபிவிருத்தியுடன் தொடர்புடைய நிறுவனத்தின் (சய்னா ஹார்பர்) ஊடாகவே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துடன் பெளத்த பிக்கு ஒருவரும் தொடர்புபட்டுள்ளார்.
எனவே, அமெரிக்க ஊடகம் வெளியிட்ட குறித்த தகவல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன் நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S