மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, சீனாவினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் தொடர்பான முழுமையான தகவல்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, சீனாவினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் தொடர்பான முழுமையான தகவல்களை, அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

இவ்வாறு பணம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான உரிய ஆதாரங்களுடன், நாடாளுமன்றத்தில் அந்தத் தகவல்களை வெளியிடவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மஹரகம பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்ததுடன், தாம் வழங்கவுள்ள ஆதாரங்களைக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அவரது குழுவினருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!