மஹிந்த 3 வருடத்தில் கட்டியெழுப்பிய நாட்டை, இந்த அரசாங்கம் 3 வருடத்தில் அழித்துள்ளது

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்று வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாகவும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் ஜனநாயகத்தை மட்டுமல்ல முழு நாட்டையே அழித்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“எளிய” (பிரகாசம்) என்ற கருப்பொருளில் நடைபெற்றுவரும் தொடர் நிகழ்ச்சியின் மாத்தளை மாவட்டத்துக்கான கூட்டம் கலேவெல ரி.பீ. தென்னகோன் ஞாபகர்த்த மண்டபத்தில் இன்று (01) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Sharing is caring!