மாகாணசபைகளின் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

மாகாணசபைகளின் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் ஏனைய அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!