மாணவர்களில் 80 வீதமானோருக்கு தேசிய அடையாளஅட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது

இந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் 80 வீதமானோருக்கு தேசிய அடையாளஅட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைத்த விண்ணங்களுக்கு அமைய, விநியோகிக்கப்படாத அடையாளஅட்கைள் இம்மாத இறுதிக்குள் விநியோகிகப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க கூறியுள்ளார்.

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3,50,000 மாணவர்கள் அடையாளஅட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அடையாளஅட்டைக்கு இதுவரை விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகள் FIS உடனடியாக விண்ணப்பிக்குமாறும் ஆட்பதிவு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, 2018 கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!