மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…..நீர்த்தாரை பிரயோகம்

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறி மாணவர்களால் (HND) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் செயற்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வீச்சு தாக்குதலில் 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Sharing is caring!