மாத்தளை – எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள்

மாத்தளை – எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ன உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தகவல் தருகையில்
எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்துக்குச் சொந்தமான பண்டரபொல தேயிலைத் தொழிற்சாலைஇ ரத்துவத்த ரோசா பளிங்குக் கற்கள் ஒப்பந்தம்இ செம்பவுத்த சுற்றுலா மத்திய நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு கோப் குழுவினர் மேற்கொண்ட விஜயத்தின் போது இநத இந்த விடயங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். கோப் குழுவினர் கடந்த 16ஆம் திகதி இந்தப்பகுதிக்கு இதற்காக சென்றதாகவும் தெரிவித்தார்.

இந்த பெருந்தோட்ட யாக்கம அரசாங்கத்துக்கு சொந்தமானத. பொது வியாபார செயற்குழுவின் கீழ் கணக்காய்வாளரின் கணக்காய்வுக்கு உட்பட்ட நிறுவனம். 2016ஆம் ஆண்டு குறித்த நிறுவனம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் மீண்டும் அதன் பணிப்பாளர் சபை இந்த மாதம் 20ஆம் திகதி கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துனெத்தி மேலும் தெரிவித்தார்

Sharing is caring!