மாத்தளை முத்துமாரிக்கு இன்ற இரதோற்சவம்

இந்துக்களால் கொண்டாடப்படும் கடலாடும் விழாவான மாசி மகம் இன்றாகும்.

மாசி மாதத்து பௌர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திர நன்நாளையே மாசிமகம் என புராணங்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், இயற்கை எழில் கொஞ்சும் மாத்தளை நகரில் எழுந்தருளி அருள்பாளிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக இரதோற்சவ பெருவிழா இன்று (19) நடைபெறவுள்ளது.

இதேவேளை, மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இன்றும் நாளையும் குரல்தேர்வு மற்றும் திரைப்பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், தெரிவுசெய்யப்படும் திறமைசாலிகளுக்கு நேரடியாக செய்தி வாசிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.

Sharing is caring!