மார்பு எக்ஸ்ரே முதன் முதலாக காசநோய் பிரிவிற்கு இணைப்பு

யாழ்.பண்ணை மார்புநோய் சிகிச்சை பிரிவில் புதிதாக இணைக்கப்பட்ட மார்பு எக்ஸ் ரே இயந்திர பிரிவு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த தகவலை யாழ்ப்பாண மாவட்ட காச நோய் தடுப்பு மருத்த அதிகாரி மருத்துவர் சி.யமுனாந்தா தெரிவித்தார் .

“தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தினால் 16 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன இலத்திரனியல் கதிர் இயக்க இயந்திரம்

யாழ்ப்பாண காசநோய் தடுப்பு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் இன்று (14) புதன்கிழமை இலவசமாக சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நோயாளர் பரிசோதிக்கப்படும்போது மருத்துவர் நேரடியாக அவற்றை அவதானி க்கமுடியும் என்பது சிறப்பம்சமாகும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்முறையாக இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது” என்றும் மருத்துவர் சி.யமுனாந்தா தெரிவித்தார்.

Sharing is caring!