மாற்று திறனாளிகளுக்காக சூரிய சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்த 13வயதான கிளிநொச்சி மாணவன்..!

கிளிநொச்சி- ஆனந்தபுரம் கிராமத்தை சோ்ந்த 13 வயதான பாடசாலை மாணவன் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்காக சோலார் சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்து சாதித்துள்ளான்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 8ம் வகுப்பில் கல்வி கற்கும் சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவனே மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த துவிச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளான். தனது தாத்தாவின் உதவியுடன்

கழிவு பொருட்களை கொண்டு இந்த துவிச்சக்கர வண்டியை உருவாக்கியிருக்கின்றான். இதனை பலரும் பாராட்டியிருக்கின்றனர். கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப வளர்ச்சி இன்று பல்வேறு நிலைகளை அடைந்து கொண்டிருக்கும் நிலையில்.

13 வயதான இந்த சிறுவனின் கண்டுபிடிப்பை அல்லது எமது கண்டுபிடிப்பை நாம் பாராட்டவேண்டும்.

Sharing is caring!