மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனு­ம­திக்க முடி­யாது எனக் கூறும் அதி­கா­ரத்தை இரா­ணு­வத் தள­ப­திக்கு யார் வழங்­கி­யது?

தமிழ் மக்­க­ளின் காவல் தெய்­வங்­க­ளா­கப் போற்­றப்­ப­டும் மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனு­ம­திக்க முடி­யாது எனக் கூறும் அதி­கா­ரத்தை இரா­ணு­வத் தள­ப­திக்கு யார் வழங்­கி­யது என்று கேள்வஎழுப்­பி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ராஜா.

அநு­ரா­த­பு­ரத்­தில் வைத்­துக் கருத்­துக் கூறி­யி­ருந்த இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க, மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனு­ம­திக்க முடி­யாது. போரில் இறந்­த­வர்­களை மாத்­தி­ரமே தமிழ் மக்­கள் அஞ்­ச­லிக்க முடி­யும் என்று கூறி­யி­ருந்­தார்.

அது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-

இந்த நாடு மக்­க­ளாட்சி நாடு என்று கூறு­கின்­ற­னர். அதி­லும் அமைச்­சர் ஒரு­வர் 5 நட்­சத்­திர மக்­க­ளாட்சி நாடு என்று மார்­தட்­டு­கின்­றார். ஆனால் உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவு கூரும் நிகழ்­வொன்­றைத் தடை­செய்­வது மக்­க­ளாட்­சிக்கு விரோ­த­மான செயல். அதை இரா­ணு­வம் முடி­வெ­டுத்­துச் செயற்­ப­டுத்த முனை­வது பார­தூ­ர­மா­னது.

இரா­ணு­வமே இந்த விட­யத்­தில் முடி­வெ­டுக்­கும் என்­றால் நாட்­டில் தற்­போது நடை­பெ­று­வது மக்­க­ளாட்சி அல்ல, இரா­ணுவ ஆட்­சியே என்று அறி­வி­யுங்­கள். இரா­ணு­வத் தள­பதி முடி­வெ­டுக்க முடி­யும் என்­றால் அரச தலை­வர், தலைமை அமைச்­சர், நாடா­ளு­மன்­றம் எதற்கு?

முப்­ப­டை­க­ளுக்­குப் பொறுப்­பாக அரச தலை­வர் உள்­ள­நி­லை­யில் இரா­ணு­வத் தள­பதி வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கு யார் பொறுப்பு?. இந்த ஆண்டு மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் அனு­ம­திக்­கப்­ப­டாது என்­றால் கடந்த இரு ஆண்­டு­க­ளும் அனு­ம­திக்­கப்­பட்­டமை பன்­னாட்­டுச் சமூ­கத்தை ஏமாற்­று­வ­தற்கே என்­பதை இரா­ணு­வத் தள­பதி பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொள்ள வேண்­டும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­ச­ரு­டன் கலந்­து­ரை­யாடி இந்த விட­யத்­தில் உரிய தீர்­வைப் பெற்­றுக்­கொள்­ளும். தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பாடு அர­சுக்கு உண்டு. அதை விடுத்து இரா­ணு­வத்­தி­ன­ரைப் பேச விட்டு மக்­க­ளைக் கொதி­நி­லைக்­குக் கொண்டு செல்­லக் கூடாது.- என்­றார்.

Sharing is caring!