மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி இல்லை

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!