மா.சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு….மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது

பொதுஜன பெரமுனவின் தென் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவாறு இன்றைய சபை அமர்விற்கு வருகை தந்தனர்.

அவர்கள் தென் மாகாண சபைக்கு வருகை தந்தபோது, நுழைவாயில் மூடப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

நுழைவாயில் திறக்கப்படும் வரை மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் கூடிய தென் மாகாண சபை அமர்விற்கு இரண்டு இலட்சம் ரூபா மக்களின் நிதி செலவிடப்படுகின்றது.

ஒரு நாளைக்கு 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகளவில் செலவிடப்படும் மேல் மாகாண சபையின் நேற்றைய அமர்வு உறுப்பினர் ஒருவரின் எதிர்ப்பு மற்றும் கோரமின்மையால் இடைநடுவில் நிறுத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Sharing is caring!