மிதந்துவந்த நிலையில், கேரளா கஞ்சா அடங்கிய 7 பொதிகள்

மன்னார் கடற்பகுதியில் மிதந்துவந்த நிலையில், கேரளா கஞ்சா அடங்கிய 7 பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று மாலைவேளையில் முன்னெடுக்கப்பட்ட ரோந்துப் பணியின்போது, குறித்த பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 7 பொதிகளிலும் இருந்து 284 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்து முழங்காவில் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், கிளிநொச்சி நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முழங்காவில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Sharing is caring!