மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயம்

மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்

28 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்

சம்பவத்தில் காயமடைந்த 25 வயதான இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Sharing is caring!