மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பு

மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியுடனான வானிலையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மின்சார துண்டிப்பை மேற்கொள்ளாது, தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 76.5 வீதம் வரை காணப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

Sharing is caring!