மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தினால் மின்குமிழ் இலவசம்

மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டீ. மின் குமிழ்களை இலவசமாக வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மானி வாசிப்பாளரினால் எதிர்வரும் நாட்களில் வீடுகளுக்கே இந்த மின் குமிழ்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Sharing is caring!