மின்சாரம் பாய்ச்சி மகனைக் கொன்ற தந்தை கைது

மாத்தறை – வல்கம பகுதியில் தந்தையொருவர் மின்சாரத்தைப் பாய்ச்சியதில் மகன் உயிரிழந்துள்ளார்.

வல்கம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, நேற்றிரவு 11.50 மணியளவில் தந்தை, மகன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீதான நீதவான் விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.

Sharing is caring!