மின்னல் தாக்கத்தின் போது எச்சரிக்கை

கேகாலை , கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று முதல் 100 – 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில், மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில், பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மின்னல் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Sharing is caring!