மில்லியன் பணக்கடத்தல் – இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

28 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வௌிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூரோ, கட்டார் ரியால், சவூதி ரியால், சுவிஸ் பிரேங்க் மற்றும் டென்மார்க் குரோனர் உள்ளிட்ட வௌிநாட்டு பணம் சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பதில் சுங்க ஊடகப் பேச்சாளர் விபுல மினுவங்கொட தெரிவித்தார்.

பயணப்பொதியில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து பணத்தை கொண்டு செல்ல முயன்ற போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் 25 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Sharing is caring!