மீட்டர் பொருத்தப்படாத மற்றும் பயணக் கட்டணத்துக்கான பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மீட்டர் பொருத்தப்படாத மற்றும் பயணக் கட்டணத்துக்கான பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும மாதம் முதலாம் திகதி முதல் இது தொடர்பான சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த தீர்மானமானது சட்டத்திற்கு முரணானது எனவும் இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!