மீண்டும் ஒரு மிளகாய் தூள் தாக்குதல் சம்பவம்

இலங்கையில் மீண்டும் ஒரு மிளகாய் தூள் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தின் விற்பனை நிலையமொன்றில் நடாத்திச்செல்லப்பட்ட பாரிய போதைப்பொருள் வர்த்தகமொன்றை சுற்றிவளைத்த காவற்துறை அதிகாரிகள் மீது நேற்று மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவின் 5 அதிகாரிகள் மீது இவ்வாறு மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தை நடாத்தி சென்ற வர்த்தகர் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டு காவற்துறை அதிகாரிகளை தாக்கி மகிழூர்தியில் தப்பிச் சென்றுள்ளார்.

மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போதைய நிலையில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் அண்மையில் நடாளுமன்றிலேயே மிளகாய் தூள் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!