மீண்டும் சீருடைத் துணி

அரச பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வவுச்சருக்குப் பகரமாக சீருடைத் துணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி சீருடைத் துணியை விநியோகிக்க தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணி வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Sharing is caring!