மீண்டும் நீதிபதி இளஞ்செழியன் அதிரடி……கலக்கத்தில் கிழக்கு ஆளுனர், அதிகாரிகள்

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் முன்று வெற்றிடம் நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டு பரீட்சைகள் இடம்பெற்றுள்ளன. திறமை அடிப்படையில் போதுமான புள்ளிகளை தான் பெற்றுள்ள நிலையில்

தன்னை நோ்முக தோ்வுக்கு அழைக்கவில்லை. என கிழக்கு ஆளுநா் ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண கல்வி செயலாளா், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழ உறுப்பினா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திறமை அடிப்படையில் தேர்வு இடம்பெறாது இன விகிதாசார அடிப்படையில் தேர்வு இடம்பெறுகின்றது.

இலங்கை உயர் நீதிமன்ற தீர்ப்பில் நியமனங்கள் திறமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பினை மீறி கிழக்கு மாகாண ஆளுநர், கல்விச் செயலாளர், அவர் சார்ந்த பொது சேவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்த நீதிமன்றம் தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரி தரப்பில் ஆஜரான சட்டதரணி இன்று நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.

திறமை அடிப்படையில் நியமனம் செய்யப்படுமானால் உயர்நீதிமன்ற தீர்ப்பினை மீறக்கூடாது.

வெற்றிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெறுவதற்கு எதுவித தடை உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்காத சூழ்நிலையில் நியமனங்கள் தற்காலிகமான இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சார்பில் ஆஜரான சட்டதரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

திறமை அடிப்டையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பினை அமுலப்படுத்த வேண்டியது ஆளுநர், மற்றும் அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் கடுமையான அறிவுறுத்தல் வழங்கினார்.

நீதிமன்றிற்கு உதவும் வகையில் சட்டமா அதிபர் நினைக்காத அரச சட்டவாதியை இவ்விடயத்தில் தலையீடு செய்து, தகுந்த சட்ட ஆலோசனை வழங்கி திறமை அடிப்படையில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க அரச சட்டவாதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

25.03.2019 பூரண அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பினை மீற எவருக்கும் அனுமதிக்க முடியாது. 25.03.2019 அன்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் சூழ்நிலை ஏற்படும் என நீதிபதி அறிவுறுத்தி மேலதிக விசாரணைக்கு திகதி இடப்பட்டது.

Sharing is caring!