மீண்டும் வடக்கில் மன்னராட்சி…ஆளுனர் சுரேன் ராகவன் வந்தபின்…

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் நகரை சுற்றி வலம் வருவதும் அங்கு தாம் சந்திக்கும் மக்களுடன் பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

குறிப்பாக அண்மையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சந்தித்த ஆளுநர் அவர்களுடன் பேசியிருக்கின்றார். மேலும் பூநகரி பிரதேசத்திலும் விவசாயி ஒருவரை சந்தித்து பேசினார்.

மன்னார் ஆட்சிக்காலத்தில் மன்னர் நகர் வலம் வந்து மக்களுடைய பிரச்சினைகள், தேவைக ளை அறிவதுபோல் ஆளுநருடைய செயற்பாடு அமைந்திருப்பதாக கூறப்படுவதுடன், ஆளுநருடைய இத்தகைய செயற்பாட்டுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின் றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Sharing is caring!