முச்சக்கரவண்டிக் கட்டணம் அதிகரிப்பு நடவெடிக்கை

முச்சக்கரவண்டிக் கட்டணத்தை இன்று (15) முதல்அதிகரிப்பதற்கு, முச்சக்கரவண்டிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல், இரண்டாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 5 ரூபாவால் அதிகரிப்பதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் ஊழியர்களின் சங்கத்தின் செயலாளர் எல். ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

10 வருடங்களிற்கு பின்னரே தமது சங்கத்தினால் கட்டணம் அதிகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களில் மட்டும் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிப்பதாக சுயவேலைவாய்ப்பு ஊழியர்களின் முச்சக்கரவண்டி சங்கம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், எரிபொருள் விலைத் திருத்ததிற்கு அமைய தமது சங்கமும் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுமில் ஜயரூக் கூறியுள்ளார்.

Sharing is caring!