முச்சக்கர வண்டியில் இருந்த சாரதி திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு

முச்சக்கர வண்டியில் இருந்த சாரதி திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் நேற்று மந்திகையில் நடந்துள்ளது. குடத்தனை அம்பனைச் சேர்ந்த முத்து செல்லத்துரை ( வயது 71 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மந்திகைப் பகுதியில் உள்ள அரசினர் ஆதார மருத்துவமனை வீதியில் நாச்சந்திப் பகுதியில் முச்சக்கர வண்டியில் தரித்து நின்றபோது அவர் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளார்.

அங்கிருந்தவர்களால் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாரடைப்பு ஏற்பட்டே அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Sharing is caring!