முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதில் முறைப்பாடுகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 10 வகையான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ய குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளின் போது, அதிபர்களால் ஏதேனும் அநீதிகள் இழைக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதுவரை முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள முடியாதுபோயுள்ளவர்களுக்கு, உரிய பாடசாலைகளைத் தெரிவு செய்து வழங்குமாறு வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.

Sharing is caring!