முன்னால் போராளியை தாக்கினாராம் ஊடகவியலாளர்…ஶ்ரீதரனின் அரசியல் விளக்கம் இது!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினா்கள் நடாத்திய போராட்டத்தில் முன்னாள் போராளி ஒருவரை கமராக்காரன் தாக்கியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அப்பட் டமான பொய் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடா்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரியும், இலங்கை அர சுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். எனக்கோரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினா்கள் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி நகரில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது மக்கள் போராட்டத்தை குழப்பும் வகையிலும், மலினப்படுத்தும் வகையிலும் தமிழ்தேசிய கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஆதரவாளர்கள் நடந்து கொண்டனர். அவர்கள் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களுடனும், எந்த அடிப்படையும் இல்லாமல் முரண்பட்டனர். இந்நிலையில் அன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை அழைத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அன்று ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட சம்பவத்துடன், தமது ஆதரவாளர்கள் சிலர் சம்மந்தப்பட்டுள்ளதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளதுடன், அவர்களுடைய அந்த தவறுக்காக தாம் பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், ஒரு கமராக்காரன் தமது கட்சியின் ஆதரவாளர்களின் உணர்வுகளை துாண்டியதாகவும்,

ஊடகவியலாளர்கள் என அழைக்க முடியாத மேலும் சில கமராக்காரர்கள் தனது ஆதரவாளர்களை துாண் டியதுடன், முன்னாள் போராளி ஒருவரை கீழே தள்ளி விழுத்தினார் எனவும் குற்றஞ்சாட்டியதுடன், கீழே விழுந்தவரை துாக்கிவிட சென்றபோதே முரண்பாடு உருவானதாகவும்

ஆதரவாளர்களின் மனங்களை வேண்டுமென்றே துாண்டிவிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார்கள். இதனால் ஊடகவியலாளார்களுக்கு மனக்கசப்பு உருவானது என கூறினார்.

இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த சக ஊடகவியலாளர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவி னா்களும் அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்கவில்லை. என உறுதிபட கூறியிருக்கின்றனர். மேலும் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்,

தனது பகிரங்க குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதனையும் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. தனது கட்சிக்காரர்கள் தவறு செய்துவிட்டார்கள் எனவும், அதற்காக தான் மன்னிப்பு கோருகிறேன் எனவும் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கான பரிகாரத்தை கட்சி செய்யும் என கூறுகிறார். இதன் ஊடாக நடந்த உண்மைகளை புரட்டியடித்து சில விடயங்களை மறைத்து தனது ஆதரவாளார்கள் பொதுவெளியில் செய்த அநாகரிகத்தை மறைக்க முயற்சிக்கிறாரா? அண்மையில் தனது கட்சி ஆதரவாளர்களிடம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவருடைய பெயரை சுட்டிக்காட்டி, அவர் ஒரு அரசியல் கட்சியுடன் சம்மந்தப்பட்டுள்ளார். என கூறியிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!