முன்னாள் எம்.பிக்களும் குட்டித் தேர்தலில் களமிறக்கம்!

முன்னாள் எம்.பிக்களும் குட்டித் தேர்தலில் களமிறக்கம்!

2018 பெப்ரவரி முற்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், மாகாண சபை உறுப்பினர்களும் போட்டியிடவுள்ளனர்.

மாநகர முதலமைச்சர், பிரதேச, நகர சபைகளின் தலைவர் பதவியைக் குறிவைத்தே இவர்கள் களமிறங்கவுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட பிரதான கட்சிகளிலேயே இவர்கள் போட்டியிடவுள்ளனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ரோஸி சேனாநாயக்க ஐ.தே.கவின் கொழும்பு மாநாகர சபைக்கான முதல்வர் வேட்பாளராகக் களம் காணவுள்ளனர். முன்னாள் எம்.பிக்களில் இவரின் பெயர் மட்டுமே தற்போது பகிரங்கமாக வெளியாகியுள்ளது. ஏனையோரின் விவரம் விரைவில் வெளிவரும்.

Sharing is caring!