முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரிப்பதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 39 கோடி ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசேட மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ராஜரட்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Sharing is caring!