முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுவிக்க நடவடிக்கை

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து மஹிந்த – மைத்திரி தலைமைமயிலான புதிய அரசாங்கம் விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் பதிவிட்ட அவர், கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும் மூவாயிரத்திற்கும் அதிகமான முன்னாள் புலிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான புதிய அரசாங்கம் மீதமுள்ள போராளிகளை புனர்வாழ்வளித்து விடுவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரங்களைக் கண்டறிந்து உதவிகளை புதிய அரசு புரியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Sharing is caring!