முன்மாதிரியான யாழ் மாநகர சபை உறுப்பினர்

யாழ்.மாநகரசபை தொடா்பில் பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், அந்த விமர்சனங்கள் ஒட்டுமொத்த மாநகரசபை உறுப்பினர்களுக்கும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கின்றது.

காரணம் ஒரு சில மாநகரசபை உறுப்பினர்கள் தமது இயலளவுக்கும் மேல் சென்று மக்களுக்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறானவர்கள் தொடல்பான பார்வை மற்றும் விமர்சனங்கள்,

அரசியல் விருப்புக்கள், கட்சிபேதங்கள் கடந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டியவை என யாழ்.வலயம் ஊடகம் நினைக்கிறது. அந்த வகையில் யாழ்.மாநக ரசபை உறுப்பினரான ந.லோகதயான் குறித்த பார்வை, இங்கு தரப்படுகிறது.

2018ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி யாழ்.மாநகரசபை உத்தியோக பூர்வமாக ஆட்சியமைக்கப்பட்டது. யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள 3ம் வட்டார உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஒரு ஆண்டில் யாழ்.மாநகரசபைக்கு கிடைத்த சபை நிதியில் அமைக்கப்பட்ட 2 வீதிகளுக்கு அப்பால் சொந்த முயற்சியினால் சபைக்கு தேடி கொடுத்த நிதியின் மூலம் நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருந்த 5 வீதிகளை புனரமைத்துள்ளார்.

சில அரசியல்வாதிகள்போல் அல்லாமல் பூரணமான தார் வீதிகளாக புனரமைப்பு செய்துள்ளார். இவ்வாறு மாநகரசபைக்கு வெளியிலிருந்து நிதி மூலங்களை எவரும் கொண்டு வந்தது கிடையாது என்பது இன்னும் விசேட அம்சம்.

இதுவரை 4 முக்கியமான தீர்மானங்களை இவர் சபையில் கொண்டுவந்து அதனை நிறைவேற்றியதற்கு அப்பால் அதனை நடைமுறைப்படுத்த தொடர்ச்சியாக முயன்று வருகின்றார்.

அவையாவன ஆரியகுளம் புனரமைப்பு, யாழ்.பிரதான நுலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தறவான நினைவுக்கல் அகற்றல், மாநகரசபையில் இடம்பெற்ற தவறான நிதி கையாளுகை, உள்ளிட்ட 4 தீர்மானங்களை கொண்டுவந்துள்ளார்.

மேலும் யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கான கொடுப்பனவில் 90 வீதமானதை பொதுப்பணிக்காக பயன்படுத்துகின்றார். மேலும் தனது வட்டாரத்திற்குள் உள்ள மண் வீதிகளை தார் வீதிகளாக மாற்றுவது தனது இலக்கு என கூறுகிறார்.

இவற்றுக்கும் அப்பால் போரினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கும் உதவிகளை செய்து வருகின்றார்.

இவ்வாறான மாநகரசபை உறுப்பினர்களை அதிகம் பாராட்டலாம் தவறில்லை..

Sharing is caring!