முப்பரிமாணத்தில் அசத்தும் இலங்கை இளைஞன்

இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வரைந்துள்ள முப்பரிமாண ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

முப்பரிமாண கலை என்பது பன்னாட்டளவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இலங்கையில் முப்பரிமாண கலைஞர்களும் அவர்களது படைப்பாற்றலும் குறைவாகவே உள்ளது. அதற்குரிய வசதிகள் இல்லாமையும் ஒரு காரணமாகும்.

எனினும், இலங்கையைச் சேர்ந்த ஓவியர்களில் ஒருவர் குறைவான வசதிகளில் அழகான முப்பரிமாண ஓவியங்களை வரைந்துள்ளார்.

துஷாரா சம்பத் என்ற கலைஞரே குறித்த அழகான ஓவியங்களை உருவாக்கியுள்ளார். அந்த கலைஞர் உருவாக்கிய ஓவியங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

Sharing is caring!